அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்... சி.இ.ஓ அனுமதி பெற்றால் போதும்.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி துறையின் அனுமதி பெற்ற பிறகு தேர்வு எழுத முடியும் என்ற நடைமுறை இருந்து வந்தது. அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலும், அவ்வாறு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து ஆணையரங்கத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்கும் போட்டித் தேர்வுகளுக்கு இனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி வழங்கலாம் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் "தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்திய மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு துறை முன் அனுமதி பெற வேண்டும். இந்த நிலை மாற்றி அமைக்கப்பட்டு இனி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் முன் அனுமதி வழங்கலாம்" என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt teachers granted permission for govt exams from the District CEO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->