குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? -  வெளியானது அதிகாரபூர்வத் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- "தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன் குரூப் 2 முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாகநடைபெற்று வருகிறது. 

ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, விண்ணப்பதாரர்கள் குரூப் 2 தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேர்வர்களுக்கு விளக்கமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

group two exam result date announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->