ரயில்வே துறையில் பணிபுரிய வேண்டுமா? - இதோ ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்திய ரயில்வே துறை அறிவித்திருக்கிறது. அதில், மத்திய ரயில்வேயில் அசிஸ்டன்ட் லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

காலிப்பணியிடங்கள்:- 5696 

கல்வித்தகுதி:-  மெட்ரிகுலேஷன் அல்லது எஸ்.எஸ்.எல்.சி-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட்/மெயின்டனன்ஸ் மெக்கானிக், மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக், வயர்மேன், டிராக்டர் மெக்கானிக் மற்றும் டிராக்டர் மெக்கானிக் ட்ரேடுகளில் என்சிவிடி அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் மூன்று வருட டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:- 18 - 30. 

ஊதியம்:- Rs.19,900/- 

விண்ணப்பிக்க கட்டணம்:- 500 ரூபாய். ஆனால், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர், பெண்கள், மாற்று பாலினத்தவர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டோருக்கு 250 ரூபாய் பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:- 19.02.2024. 

தேர்வு செய்யப்படம் முறை:- 

\விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விவரங்களை அறிய rrbchennai.gov.in என்ற இணைய முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancis in railway department


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->