மத்திய அரசில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in central govt
இந்திய வன சேவை பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்தத் தேர்வு குறித்த விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.
கல்வித் தகுதி :-
வேளாண்மை, வனவியல், பொறியியல் அல்லது கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :-
21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
சம்பளம் :-
மாதம் ரூ.56,100 அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். அதோடு, இதர படிகள் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:-
பெண்/ ST/ SC/ PWD போன்ற பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. மற்ற பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :-
முதற்கட்ட தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :-
* விண்ணப்பதாரர்கள் https://upsconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
* ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் பதவிகளுக்கும், இந்திய வன சேவைகளுக்கும் ஒரே முதல்நிலைத் தேர்வு தான் நடத்தப்படும்.
* முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தனித்தனியாக நடத்தப்படும்.
* ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படத்தை ஸ்கேன் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :- 11.02.2025
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி :- 25.05.2025
English Summary
job vacancy in central govt