இந்திய விமானப்படையில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?.
job vacancy in indian air force
இந்திய விமானப்படையில் காலியாக உள்ள டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 182 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி :
கிளர்க் பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தி டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். இந்தி டைப்பிஸ்ட் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிரைவர் பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் தேவை. இரண்டு வருட முன் அனுபவம் கட்டாயம்.
வயது வரம்பு :
18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி
இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://indianairforce.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
English Summary
job vacancy in indian air force