வாடகை காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டிரைவர் உள்பட 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
Woman molested in rented car 2 arrested
பெங்களூருவில் முன்பதிவு செய்து வாடகை காரில் பயணித்தபோது இளம்பெண்ணுக்கு டிரைவர் உள்பட 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தப்பி ஓடியபோதும் இளம்பெண்ணை துரத்திச் சென்று அத்துமீறிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பானசவாடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்த்தவர் இளம்பெண் ஒருவர்.அதே பகுதியில் வசித்துவரும் அந்த இளம்பெண் கம்மனஹள்ளி அருகே சிக்கமனஹள்ளியில் இருந்து வெளியே செல்வதற்காக வாடகை காரை முன்பதிவு செய்திருந்தார். அதன்படி, சம்பவத்தன்று நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் சிக்கமனஹள்ளியில் இருந்து வாடகை காரில் செல்வதற்காக இளம்பெண் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து அங்கு வந்த வாடகை காரில் இளம்பெண் ஏறி சென்றுள்ளார் . அப்போது அந்த காரில் டிரைவர், மற்றொரு நபர் இருந்துள்ளனர். மேலும் கார் புறப்பட்டதும் திடீரென காரில் இருந்த மற்றொரு நபரும், டிரைவரும் இளம்பெண்ணுடன் தகாத வார்த்தையில் பேசி, பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளனர் என கூறப்படுகிறது . இதனால் பதறிப்போன இளம்பெண் காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்.
அப்போது 2 பேரும் இளம்பெண்ணை விடாமல் துரத்திச் சென்று நடுரோட்டில் வைத்தே பாலியல் தொல்லை கொடுத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண்ணை பிடித்து கீழே தள்ளிவிட்டதால் அந்த இளம்பெண் சத்தம் போட்டு கூச்சலிட்டார். உடனடியாக அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதையடுத்து உடனே காரில் ஏறி 2 பேரும் தப்பிச் சென்று விட்டனர்.
மேலும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் உண்மையிலேயே கார் டிரைவர்களாக என்பது தெரியவில்லை. இதுகுறித்து பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதுடன், காரின் பதிவு எண் மூலமாக டிரைவர் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Woman molested in rented car 2 arrested