ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


இராமேசுவரத்தில் உள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள காலி பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

கலிப்பாணியிடங்களின் விவரங்கள்:-

* தமிழ்புலவர் 

சம்பள விகிதம் 18500-58600 Pay Matrix-22

கல்வி தகுதி:- ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தில் பி.லிட் அல்லது பி.ஏ (அல்லது) எம்.ஏ. (அல்லது) எம்.லிட் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் மற்றும் திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

* பிளம்பர் :

 சம்பள விகிதம் 18000-56900 Pay Matrix -19

கல்வி தகுதிகள்:-

அரசு/அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ) நிறுவனத்தால் வழங்கப்பட்ட பிளம்பர் பாடப்பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய பிரிவில் ஐந்தாண்டுகள் அனுபவம் அல்லது இரண்டாண்டுகள் தொழில் பழகுநர் பெற்றிருக்க வேண்டும்.

* காவலர் : 

சம்பள விகிதம் 15900-50400 Pay Matrix -17 

கல்வித் தகுதிகள்:- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். 

* கருணை இல்லம் காப்பாளர் (பெண்):- 

சம்பள விகிதம்:- 15900-50400 Pay Matrix -17 

கல்வித் தகுதிகள்:- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். 

* துப்புரவுப் பணியாளர்கள்:- 

சம்பள விகிதம் 10000-31500 Pay Matrix-10 

கல்வித் தகுதிகள்:- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

* கால்நடை பராமரிப்பு:-

 சம்பள விகிதம் 10000-31500 Pay Matrix -10

தகுதிகள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :18 - 45

விண்ணப்பிக்கும் முறை:- வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் https://rameswaramramanathar.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:- இணை ஆணையர்/செயல் அலுவலர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் இராமேசுவரம் – 623 526, இராமநாதபுரம் மாவட்டம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in ramanathaswamy temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->