பிரபல வங்கியில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


SBI எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.

பணியின் விவரம் :

1. Trade Finance Officer (MMGS-II)

கல்வித் தகுதி:- ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். ஐஐபிஎப் வழங்கும் Forex சான்றிதழ் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 23 முதல் 32-varai

சம்பளம்: மாதம் ரூ. 64,820 – ரூ.93,960 வரை வழங்கப்படும்.

2. பணி: Deputy Manager (Archivist) – 1

கல்வித்தகுதி: நவீன இந்திய வரலாற்றில் சிறப்புப் பாடத்துடன் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.64,820 – ரூ.93,960 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: 27 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதம் பயிற்சிக்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bank.sbi/careers அல்லது https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in state bank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->