ரெயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து அழிப்பு - திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பை வலியுறுத்தி தமிழகத்தில் திமுக போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான திமுகவினர் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்தனர். 

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே சேவா என்ற எக்ஸ் இணையதள பக்கத்தில் சிலர் புகார் அளித்துள்ளனர். உடனடியாக ரயில்வே சேவா அமைப்பினர் பாலக்காடு ரயில்வே டிவிஷன் ஆர்பிஎஃப் போலீசுக்கு புகார் கொடுத்தனர். 

இதனை அடுத்து பாலக்காடு டிவிஷன் ஆர்பிஎப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துக்களை ஒரு மணி நேரத்தில் மீண்டும் பழையபடி மாற்றி அமைத்தனர்.

அதன் பின்னர் பொள்ளாச்சி ரயில் நிலைய அதிகாரிகள் சார்பில் தி.மு.க.,வினர் நான்கு பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் படி அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case file against dmk excuetives for hindi letters erase issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->