வார விடுமுறை - திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் இந்தக் கோவில் விளங்கி வருகிறது.

அதனால், இந்தக் கோவிலுக்கு வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அதிலும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும். 

இந்த நிலையில், வார விடுமுறை  நாட்களையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

devotees croud increase in thiruchenthur temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->