இந்து அறநிலையத்துறையின் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in trichy temple
திருச்சியில் உள்ள ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாகவுள்ள எழுத்தர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:-
10ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயதுவரம்பு:-
18 வயது முதல் 45 வயது வரை.
சம்பளம் : ரூ.10,700 முதல் ரூ.33,700 வரை
விண்ணப்பிக்கும் முறை:- thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் அதை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் கட்டாயம், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒட்டியிருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் :
* பள்ளி சான்றிதழ் நகல்
* ஆதார் அட்டை நகல்
* கல்வி சான்று நகல்
* நன்னடத்தை சான்று நகல்
* அனுபவ சான்று நகல்
* இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க சாதி சான்றிதழ்
* சுய விலாசிமிட்ட ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் உறை ஒன்று உள்ளிட்டவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 07.09.2024 ஆகும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், – 620005. தொலைபேசி எண் : 04312230257.
இந்த பணிக் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள www.tnhrce.gov.in மற்றும் thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
English Summary
job vacancy in trichy temple