மதுரை: கல்குவாரிகள் குறித்து பேட்டி! சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்திய கல்குவாரி ஊழியர்?!
Madurai Stone Quarry Attack
மதுரையில் உரிமம் இல்லாமல் செயல்படும் கல்குவாரிகள் குறித்து பிரபல தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த சமூக ஆர்வலர் ஞானசேகரன் மீது கல்குவாரி ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஞானசேகரன் அந்த பேட்டியில், "தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளின் மூலம் கல்குவாரி உரிமம் இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. பலமுறை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரவு நேரத்தில் லாரி மற்றும் ஜேசிபியுடன் கல்குவாரி ஊழியர்கள் கனிம வளங்களை அள்ளிச் செல்கின்றனர்" என்று புகார் அளித்தார்.
இதற்குப் பின்னர், கல்குவாரி ஊழியர் ஒருவர் ஞானசேகரனை தாக்கியதாகவும், சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து, அதிமுகவின் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
English Summary
Madurai Stone Quarry Attack