திறமையற்ற முட்டாள்..ஜெர்மன் அதிபர் பதவி விலக வேண்டு..எலான் மஸ்க் கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில்  கிறிஸ்துமஸ் சந்தையில் ஏராளமான மக்களுக்கு மத்தியில் கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியது இதில் இருவர் உயிரிழந்தனர்.இதற்க்கு உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலா மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில் “ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

 ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை தாறுமாறாக ஓட்டி நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பலியாகினர். 68 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சவுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் இத்தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு குழந்தை உள்பட இருவர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு தரப்பு உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த தாக்குதல் குறித்து ஜெர்மன் பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “மேக்டேபர்க் சம்பவத்துக்கு கண்டனங்கள். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நெருக்கடியான நேரத்தில் பாதுகாப்பு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டோருக்கு எனது நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

தனக்கு சாதகமாக்கிய எலான் மஸ்க்:

இந்தநிலையில் இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் ”ஷோல்ஸ் திறமையற்ற முட்டாள்; அவர் பதவி விலகவேண்டும் ”என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவளித்த நிலையில் ட்ரம் வெற்றிப்பெற்றதை அடுத்து டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தில் திறன் துறை தலைமை பதவியை பெற இருக்கிறார்.

இதனிடையே, இன்னும் சில மாதங்களில் ஜெர்மனியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்காக தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

அந்நாட்டு கருத்துக்கணிப்புகளின் படி AFD இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும் ஐரோப்பா முழுவதும் உள்ள பிற குடியேற்ற எதிர்ப்புக் கட்சிகளுக்கு ஏற்கனவே ஆதரவைத் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், ஜெர்மன் அரசாங்கம் மஸ்க்கின் இடுகையை கவனத்தில் கொண்டதாகக் கூறியது, ஆனால் அதன் வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Incompetent idiot The German chancellor must resign Elon Musk slammed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->