SBI வங்கியில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy of sbi bank
நாட்டின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியில் உள்ள 800 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : பி.இ, பி.டெக், எம்சிஏ, எம்.டெக் அல்லது எம்.எஸ்.சி ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்:-
பணிக்கு ஏற்ப 2 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: துணை மேலாளர் பணியிடங்களுக்கு ரூ.64,820 – ரூ.93,960 வரையும், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ரூ.48,480 – ரூ.85,920 வரையும் மாத சம்பளமாக வழங்கப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:- இந்த பணிக்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். அதே சமயம் எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sbi.co.in/web/careers என்ற அதிகாரப்பூர்வ SBI இணையதளத்தை அணுகவும் மற்ற விவரங்கள் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
அக்டோபர் மாதம் 4ஆம் தேதிக்குள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.