மாதம் 50000 சம்பளம் - மலேசியாவில் வேலை! தமிழக அரசின் செய்தி வெளியீடு! - Seithipunal
Seithipunal


அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அவர்களின் வேண்டுக்கோள்!

விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

மலேசியாவில் பணிபுரிய Construction Worker, Construction (Helper) மற்றும் Welder ஆகிய பெறப்பட்டுள்ளது.

பணிகளுக்கான தேவைப்பட்டியல்:

மலேசியாவில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் படித்துள்ள, பணி அனுபவம் அல்லது பணி அனுபவம் இல்லாத 50 வயதிற்கு உட்பட்ட Construction Worker, Construction (Helper) மற்றும் Welder தேவைப்படுகிறார்கள். 

Construction Worker ஆகிய பணிக்கு ரூ.50,000/- ஊதியமாகவும் Construction (Helper) ரூ.28,000/- ஊதியமாக வழங்கப்படும். 

மற்றும் Welder (Welder qualifying Test) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.40,000/- வழங்கப்படும். மேலும், உணவு, இருப்பிடம் விமானப் பயணச்சீட்டு மற்றும் விசா வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இந்நிறுவன ovemcInm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 26/07/2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜண்டுகளோ எவரும் இல்லை. ஆகவே விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் சேவைக்கட்டணமாக இந்நிறுவனத்திற்கு ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malaysia construction site job opportunity and government announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->