#BigBreaking || திடீர் திருப்பம்., ஜனவரி 31 வரை மூடல்., சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
no school reopen after pongal leave
அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதற்கிடையே பொங்கல் விடுமுறை முடிந்த உடன், வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி அன்று முதல், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல பள்ளிகள் தொடங்கப்படும் என்று, பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், ஜனவரி 19-ஆம் தேதி பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்து தா,மிளகை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருகின்ற ஜனவரி 31-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதிகரித்துவரும் நோய் பரவல் அதிகம் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
English Summary
no school reopen after pongal leave