திடீர் திருப்பம்: நாடு முழுவதும் ஆன்லைன் தேர்வு இல்லை என்ற அறிவிப்பு பொய்யானது - யுஜிசி மறுப்பு.!
online exam india issue
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்தது. இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது.
இதையடுத்து, கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஒன்றாம் வகுப்பில் இருந்து நேரடி வகுப்புகள் தொடங்கப் பட்டது.
நாடு முழுவதும் கல்லூரி பல்கலைக் கழக தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என பல்கலைக்கழக குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாநில உயர் கல்வித்துறை செயலாளர்களுக்கும், யுஜிசி செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியதாக ஒரு தகவல் வெளியாகியது.
இந்நிலையில், வெளியான அந்த சுற்றிக்கை போல் இல்ல கடிதம் பொய்யானது என்றும், அப்படி எந்த ஒரு உத்தரவையும் யுஜிசி அனுப்பவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே பெரும்பாலான பல்கலைக் கழக நேரடி தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உயர்க்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்தி நேரடி தேர்வுகளை 2 மாதங்கள் தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.