உடற்கல்வி வகுப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி.!
PET classes in schools
பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் குர்ஆனை தொடர் பரவல் குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தலைவர்கள் அழிக்கப்பட்டன பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்படி ஒருநாள் தொடரில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து வகுப்புகளும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் மழலையர் பள்ளிகள் உட்பட 12 ஆம் வகுப்பு வரை நேரடியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகளை நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மீண்டும் உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.