பாலிடெக்னிக் படிப்புகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு,.! - Seithipunal
Seithipunal


பாலிடெக்னிக் படிப்புகளில் சேர வருகிற பதினான்காம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2024-25ம் கல்வி ஆண்டின் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, முதலாண்டு மற்றும் பகுதி நேர பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து முடிந்து ஜூலை 1-ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கை அளவை அதிகரிக்கும் விதமாக, துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் உயர்கல்வி நலன் கருதியும் அவர்களுக்கு பட்டயப் படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு அளிக்கும் வகையிலும், 12 மற்றும் 10ம் வகுப்பு துணைப் பொது தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள மாணவர்களை நேரடியாக இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாண்டு, பகுதி நேரப் பட்டயப் படிப்புகளில் சேர்க்க வசதியாக மாணவர் சேர்க்கை தேதியை வரும் 14-ம் தேதி வரை நீட்டித்து அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது உயர்கல்வியை தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

polytechnic colleges admission date extened


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->