நெல்லை இளைஞர்களே ரெடியா….? 17-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்….!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 17ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது.

நடைபெறும் இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், சிதம்பரம் நகர், பெருமாள்புரம், நெல்லை.

 • இந்த முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.

• இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

• மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை தேடுபவர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private employment camp on 17th tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->