சேலம் இளைஞர்களே ரெடியா.! வருகின்ற 20-ந்தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்.!
Private employment camp on 20th in Salem
சேலம் மாவட்டத்தில் வருகின்ற 20ஆம் தேதி காலை 10 மணி அளவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நடைபெறும் இடம்:
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்.
கல்வி தகுதி: 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.
•வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு... jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
English Summary
Private employment camp on 20th in Salem