ராணிப்பேட்டையில் வருகின்ற 16ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்..! முழு விவரம் இதோ...! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டையில் வருகின்ற 16ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில், இந்த மாதத்தில் வருகிற 16-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

கல்வி தகுதி:

•8-ம் வகுப்பு

•எஸ்.எஸ்.எல்.சி.

•பிளஸ்-2 வகுப்பு

•பட்டப்படிப்பு

•ஐ.டி.ஐ.

•டிப்ளமோ மற்றும்

•பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 

மேலும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private employment camp on June 16th in ranipet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->