தமிழக ஊராட்சி துறையில் 15,700 சம்பளத்தில் அரசு வேலை.! வெளியான புதிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 189க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலா், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து நேரிலோ, அஞ்சல் மூலமோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.

மொத்த காலியிடங்கள்: 189க்கும் மேற்பட்ட பணியிடங்கள்

நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

பணி:  ஊராட்சி செயலா், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்

தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழி படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2019 அன்று 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால், 30 வயதிற்கு மேற்படாதவராகவும், மேலும் பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, அதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே, நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலா்களால் அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பதாரரின் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அந்தந்த ஒன்றித்தில் உள்ள ஊராட்சியின் தனி அலுவலா்களான வட்டார வளா்ச்சி அலுவலா்கள்(கிராம ஊராட்சிகள்) அஞ்சல் முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும். 

இது தொடர்பாக மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnrd.gov.in http://www.tnrd.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அந்தந்த மாவட்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பையோ பார்த்து தெரிந்துகொள்ளவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

requirement in rural department


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->