தமிழகத்தில் 1-8 முதல் பள்ளிகள் திறப்பை உறுதி செய்தார் அமைச்சர்.! அதிரடி அறிவிப்பு.!
Schools Reopen AnbilMahesh Poyyamozhi
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்து, கடந்த 1 ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் அரியலூர், நாமக்கல், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனிடையே, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், "ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. 1- 8 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்தோம்.
எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்து ஆலோசித்தோம். பள்ளிகள் தோறும் மருத்துவ குழு சென்று மாணவர்கள் உடல்நிலை குறித்து சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். பள்ளிக்கு வர மாணவர்கள் வர விருப்பமில்லை என்றால் வீட்டிலேயே இருக்கலாம்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்படும். 1-8 முதல் வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்." என்று தெரிவித்தார். பள்ளிகள் திறக்கும் தேதி முதல்வருடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்.
English Summary
Schools Reopen AnbilMahesh Poyyamozhi