மத்திய அரசின் SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பன்முக உதவியாளர்(MTS), ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி,மொத்த காலிப்பணியிடங்கள் 11,409. இதில், பன்முக உதவியாளர் (Multi Tasking (Non-Technical) Staff) -10880 இடங்களும், ஹவால்தார் (Havaldar in CBIC and CBN) - 529 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு கல்வி தகுதியாக 10ம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 17ம் தேதி கடைசி நாள் என்பதால், தேர்வு எழுத நாடு முழுவதும் விண்ணப்பித்த நிலையில், எஸ்எஸ்சி (https://ssc.nic.in) இணையதளம் முடங்கியது. இதனால், தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

இதனையடுத்து எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலவகாசம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், மேலும், ஒரு வாரத்திற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுவதா அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய அரசின் எஸ்எஸ்சி தேர்வுக்கு பிப்ரவரி 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் எஸ் எஸ் சி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SSC MTS exam apply online Last day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->