#BigBreaking || தமிழ்நாட்டில் "10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்" தேதி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் நாளை மறுநாள் (மே 10) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார். 

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை நாளை மறுநாள் காலை 9:30 மணி முதல் www.tnresults.nic.in மற்றும் www.dge.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவின் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SSLC exam result on May10 in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->