விருதுநகர் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு!!! சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்ய காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவுடையாபுரம் ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் திடீர் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டனர்.

சத்துணவு பயனாளிகள்:

இந்த ஆய்வின்போது பள்ளியின் சத்துணவு மையத்தில் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 293 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தினமும் 60 பயனாளிகள் மட்டுமே பள்ளியில் மதிய உணவு தயார் செய்யப்பட்டு வழங்கி வந்தது தெரியவந்துள்ளது. சத்துணவு பயனாளிகள் மீதமுள்ளவர்கள் ஏன் வரவில்லை? அதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்தனர்.

சுகாதாரமற்ற நிலை:

அதுமட்டுமின்றி காய்கறி சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளப்படாமலும்,சத்துணவு அறை சுகாதாரமற்றும் காணப்பட்டதுள்ளது . மேலும் சமையல் பாத்திரங்கள் சுத்தமற்ற நிலையிலும்,கடந்த இரண்டு மாதங்களாக உணவுப் பொருட்கள் சத்துணவு மையத்தில் ரொக்க பதிவேடு மற்றும் இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்கப்படாமல் மதிய உணவு தரமற்றதாகவும் இருந்ததை கண்டறியப்பட்டது. மேலும் இது குறித்து, விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் அறிக்கை ஒன்றினை தயார் செய்தது விருதுநகர் அலுவலகத்திற்கு அனுப்பினர்.

மாவட்ட ஆட்சித்தலைவர்:

அதன்படி ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் 'கவிதா 'என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் உத்தரிவிட்டார். இதுபோல செயல்களை பல மாவட்டங்களில் செய்து பல தண்டனைகள் பெற்றாலும் சிலர் திருந்தாமல் மேலும் இது போன்ற காரியங்களை செய்து வருகின்றன. இனியாவது இதுபோல் நடந்து கொள்ளாமல் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தரமான உணவுகளை அளிப்பார்கள் என நம்பப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden inspection in Virudhunagar Govt School What is the reason for suspending a nutritionist


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->