அடுத்த 48 மணி நேரத்தில் எல்லையில் விவசாயிகள் அறுவடையை முடிக்க வேண்டும்: கெடு விதித்துள்ள எல்லை பாதுகாப்புப் படை..!
Farmers on the border must complete the harvest in the next 48 hours Border Security Force sets deadline
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மாறும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தற்போது, பஞ்சாபில் அட்டாரி - வாகா எல்லை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பஞ்சாப்பில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர விவசாயிகள் 48 மணி நேரத்திற்குள் அறுவடை செய்ய வேண்டும் என்று எல்லை பாதுகாப்புப் படையான பிஎஸ்எஃப் இன்று அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானியர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பதால் அவர்கள் எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இங்கு பாதுகாப்பை அதிகரிக்க பிஎஸ்எஃப் தயாராகியுள்ளது.

இதனால் எல்லையோர விவசாயிகளின் அறுவடைக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 530 கிலோமீட்டர் நீளமுள்ள சர்வதேச எல்லையில் 45,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக அமிர்தசரஸ், டர்ன் தரன், ஃபெரோஸ்பூர் மற்றும் பைசலாபாத் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அறுவடையை முடிக்கும்படி குருத்வாராக்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோதுமை அறுவடையில் 80% க்கும் அதிகமானவை நிறைவடைந்திருந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுவடை செய்து, பின்னர் தீவனமாகப் பயன்படுத்த வைக்கோலை சேகரிப்பது மிகவும் சவாலானது என்று விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
English Summary
Farmers on the border must complete the harvest in the next 48 hours Border Security Force sets deadline