கனடாவில் கலாச்சார விழா ஒன்றில் அதிவேகமாக கார் புகுந்ததில் 11 பேர் பலி; திட்டமிட்ட சதி என போலீசார் தகவல்..!
11 people were killed when a car drove into a cultural festival in Canada at a high speed
கனடா நாட்டின் வான்கூவர் நகரில், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த லாப்பு லாப்பு என்ற தளபதியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக விழா நடைபெற்றது. இதில், கனடாவில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இசை, நடனம், உணவு என கலாசாரத்திருவிழா களைகட்டியது.
அப்போது அந்த கூட்டத்திற்குள் அதிவேகமாக வந்த கார் ஒன்று புகுந்தது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காரை டிரைவர் இயக்கியுள்ளார். கார் மோதிய வேகத்தில், விழாவில் பங்கேற்ற 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காரை ஓட்டி வந்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ள்ளார். அவர் வென்கவுர் பகுதியில் வசித்து வந்தவர் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
English Summary
11 people were killed when a car drove into a cultural festival in Canada at a high speed