13 ஆயிரம் காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என 13,331 காலி பணியிடங்கள் இருப்பதாக அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது.

அந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

அதில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதல் நிலை ஆசிரியர் பணியிடங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது. நேற்று முதல் நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ சமர்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temporary Teachers recruitment last date for july 06


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->