பெரம்பலூர்: (02.03.2023)நாளை மறுநாள் வட்டார அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வேப்பந்தட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் மார்ச் இரண்டாம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

நடைபெறும் இடம்: வேப்பந்தட்டை கலை-அறிவியல் கல்லூரி வளாகம்.

கல்வி தகுதி:

8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு, கலை அறிவியல், ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் 

வயது: 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் 

• இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். 

• விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளலாம். 

• மேலும் விவரங்களுக்கு.. 04328-225362 என்ற தொலைபேசி எண்ணையும், 9444094325 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The day after tomorrow private employment camp in Perambalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->