திருப்பூர் || நியாய விலை கடைகளின் 240 காலி பணியிடங்கள் நிரப்ப தேர்வு இல்லை! விண்ணப்பிப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 240 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் முறையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் உள்ள 240 விற்பனையாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் வரும் நவம்பர் 14ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி, வயதுவரம்பு, இட ஒதுக்கீடு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க http://drbtiruppur.net என்ற இணையதளம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு drbtiruppur2022@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும், உதவி மைய தொலைபேசி எண் 0421 2971173 என்ற எண்ணிலும் திருப்பூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur ration shops salesman requirement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->