தமிழக காவல்துறையில் 1,299 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் – எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதி என்ன? முழு விவரம்!
TN POLICE SI Exam
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 933 காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) மற்றும் 366 ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 7 முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரம்: காவல் ஆய்வாளர்
மொத்த காலியிடங்கள்: 1,299
பிரிவுகளின்படி காலியிடங்கள்:
காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா): ஆண்கள் – 654, பெண்கள் – 279
ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர்: ஆண்கள் – 255, பெண்கள் – 111
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு: 53
சம்பள விவரம்: ரூ. 36,900 - 1,16,600 (மாத சம்பளம்)
தகுதி: ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஜூலை 1, 2025 தேதியின்படி 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு தேதியையும் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnusrb.tn.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: மே 3, 2025.