வெளியானது குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள்.!
tnpsc group 2 and 2a exam result published
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசுத் துறைகளில் கலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் குரூப்-2, 2ஏ தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ தேர்வின் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதியவர்கள் www.tnpscresults.tn.gov, www.tnpscexams.in இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tnpsc group 2 and 2a exam result published