டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2 (தொகுதி 2 மற்றும் 2A பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (தொகுதி4 பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. 

டிஎன்பிஎஸ்சி 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை:

குரூப் -1 தேர்வு குறித்த அறிவிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகும்,
குரூப் -1 தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும்,
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டு, செப்டம்பர் 28 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும், 
குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Group 2 and 4 Syllabus change announce dec 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->