குரூப் 4 காலிப் பணியிடங்களை மீண்டும் உயர்த்தியது டிஎன்பிஎஸ்சி!! - Seithipunal
Seithipunal


குரூப் - 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 10,292 ஆக அதிகரித்த புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், விஏஓ உள்பட குரூப் -4 பதவிகளின் கீழ் வரும் காலிபணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

இந்த பதவிகளுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் சுபார் 20 லட்சத்திற்கு மேலானோர் விண்ணப்பித்து அதில், 18,36,535 பேர் கடந்த ஆண்டு. ஜூலை மாதம் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவு கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியானது. 

ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இதனால் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து 7,301 என்ற அளவில் இருந்த காலி பணியிடங்களை 10,178 ஆக டிஎன்பிஎஸ்சி உயர்த்தியிருந்தது. இந்நிலையில் மீண்டும் டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களை உயர்த்தியுள்ளது.  இந்த அறிவிப்பின் படி

இளநிலை உதவியாளர் பணிக்கு  5,321 பணியிடங்கள்,

தட்டச்சர் பணிக்கு  3,377 பணியிடங்கள், 

சுருக்கெழுத்தர் பணிக்கு 1,079 பணியிடங்கள்,

விஏஓ பணிக்கு 425 பணியிடங்கள், 

பில் கலெக்டர் பணிக்கு 69 பணியிடங்கள், 

கள உதவியாளர் பணிக்கு 20  பணியிடங்கள், இருப்பு காப்பாளர் பணிக்கு 1 காலிபணியிடம் என மொத்தம் 10,292 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Raised Group 4 Vacancies Again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->