இருதரப்பு மோதல்! சேலத்தில் பதற்றமான சூழ்நிலை! குவிக்கப்பட்ட போலீசார்! - Seithipunal
Seithipunal


சேலத்தில் மாணவர்களிடையே நடந்த சண்டை குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி காரணமாக திருமானூர் பகுதியில் இரு தரப்பு மோதலாக வெடித்துள்ளது. 

மேலும் அந்த பகுதிகள் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, வாழப்பாடிய அடுத்த திருமானூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், இரு குழுவாக பிரிந்து, ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும், அடித்து கொண்டு சண்டை போட்டுக் கொள்வதுமான வீடியோ ஒன்று பொதுமக்களின் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டுள்ளது. 

இதனால் திருமானூர் பகுதியில் இரண்டு தரப்புக்கிடையே மோதல் வெடித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் நிலைய போலீசார், இன்று காலை அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் திருமானூர் பகுதியில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுப்பு நடத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Student clash TNPolice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->