உடனே செக் பண்ணுங்க.. "குரூப் 2ஏ" தேர்வு முடிவையும் வெளியிட்டது TNPSC..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தனது செய்தி குறிப்பில் "ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (தொகுதி-II/IIA பணிகள்) (தேர்வணைய அறிவிக்கை எண்.03/2022, நாள் 23.02.2022) முதன்மை தேர்வினை (தேர்வு நடைபெற்ற நாள் 25.02.2023 மு.ப மற்றும் பி.ப) எழுதிய 51,987 தேர்வர்களின், நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் ஒரே சமயத்தில், தேர்வணைய வலைத்தளங்களில் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in கீழ்கண்டவாறு வெளியிடப்படுகிறது.


1. நேர்முகத் தேர்வு பதவிகள் :-
நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 483 தேர்வர்களின் பதிவெண் உள்ளடக்கிய பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலிலுள்ள தேர்வர்கள் மேற்குறிப்பிடட்ட தேர்வாணைய அறிவிக்கையிலுள்ள தகுதிகளை பெற்றிருக்கும் பட்சத்தில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கும் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும், நேர்முகத் தேர்வு பதவிகளை அப்பதவிகளுக்கான கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கும் தேர்வர்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தெரிவிற்கு கருதப்படமாட்டர்கள்.


2. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் :-
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான முடிவுகள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான தெரிவு முடிவடைந்த பின்னர் தேர்வர்கள் முதன்மை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் (Interactive Mode) நேர்முக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு முன்னர் வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC released Group 2A exam result


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->