மீதமுள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப கலந்தாய்வு - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக உள்ள காலியிடங்களில் 15 சதவீத இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளது. அதனால், மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக இதற்கான கலந்தாய்வை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், இதுவரைக்கும் நிரப்பப்படாமல் மீதம் 86 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய சுகாதாரத் துறைக்குக் கடிதம் எழுதி இருந்தது. 

இந்தக் கடிதத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததன் பேரில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது.

அந்த றிவிப்பின் படி அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது. மேலும், மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today mbbs seat fill counselling


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->