தென்காசியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் நாளை காலை 10 மணி அளவில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யயுள்ளனர். இம்முகாமில், 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய தென்காசி மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow April 28 private employment camp thenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->