யூரிக் அமிலத்தைக் குறைக்கும் ' 5 ' காய்கறிகள் .. எவை, எவை தெரியுமா..?! - Seithipunal
Seithipunal



யூரிக் அமிலம் என்பது நமது உடலில் உற்பத்தியாகும் ஒரு அமிலமாகும். இது நமது உடலில் உள்ள பியூரின்கள் உடைக்கப் படுவதால் இந்த யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது. இதற்கு நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணம் ஆகும். இது மருத்துவத் துறையில் 'ஹைப்பர்யூரிசிமியா' என்று அழைக்கப் படுகிறது. 

வழக்கமாக நமது உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலமானது நாம் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீருடன் கலந்து வெளியேறி விடும். அப்படி நமது உடலில் இருந்து இந்த யூரிக் அமிலம் வெளியேறாமல் போனால் தான் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

இதனால் கீல்வாதம், இதயநோய், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு மருத்துவர் ஆலோசனையின் படி மருந்துகள் உட்கொள்வதோடு, காலை வேளைகளில் சில காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். 

அவை, 

1. வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கேரட். 

2. நார்ச்சத்து நிறைந்துள்ள பாகற்காய். 

3. வெந்தயக் கீரை.

4. வெள்ளரிக்காய்.

5. பேரிக்காய். 

நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த காய்கறிகள் அனைத்தும் உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் உடலில் படிந்துள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதோடு, கீல்வாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான அறிகுறிகளையும் குறைக்கின்றன. இதனால் மூட்டுகளில் ஏற்படும் விறைப்புத் தன்மை குறைந்து, இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப் படுவதையும் தடுக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 Vegetables Which Reduced Uric Acid


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->