இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா? உடல்,மனரீதியான பிரசினைமட்டுமல்ல! உங்க வீட்ல 'இந்த' பிரச்சனைகள் இருக்கலாம்!
Are you struggling to sleep at night Not only physical and mental stress Your home may have these problems
நிகழ்கால வாழ்க்கை முறையின் காரணமாக தூக்கமின்மை (Insomnia) பிரச்சனை அதிகரித்துள்ளது. மன அழுத்தம், பணியழுத்தம், மொபைல் பயன்பாடு ஆகியவை தூக்கத்தைக் குறைக்கும் முக்கிய காரணிகள். ஆனால், வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளும் தூக்கம் இல்லாமைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? உங்கள் வீட்டில் இவைகளை சரிசெய்து பாருங்கள்!
1. படுக்கை அறையில் கண்ணாடி வைக்காதே!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடாது. கண்ணாடி நேராக படுக்கைக்கு எதிராக இருந்தால், அது தூக்கத்தை பாதிக்கக்கூடும். இருந்தால், இரவு போது ஒரு துணியால் மூடி வைக்கலாம்.
2. எலக்ட்ரானிக் சாதனங்களை வைக்க வேண்டாம்
மொபைல், லேப்டாப், டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை படுக்கை அறையில் வைக்க வேண்டாம். அவை மின்சார காந்த அலைகளை (Electromagnetic waves) வெளியிட்டு தூக்கத்தை பாதிக்கக்கூடும்.
3. தூங்கும் திசை சரியாக உள்ளதா?
வாஸ்து விதிகளின்படி,
தலை தெற்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.
வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் தூக்கம் பாதிக்கப்படும்.
4. படுக்கை அறையில் சாப்பிடாதீர்கள்
படுக்கை அறையில் உணவு உண்ணக் கூடாது. இது சக்தியை எதிர்மறையாக மாற்றி, தூக்கமின்மையை ஏற்படுத்தும். வீட்டில் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டால், மனஅமைதி ஏற்படும், தூக்கம் சீராகும்.
5. நெய் தீபம் ஏற்றவும்
தூக்கம் இல்லாமல் அவதிப்படும் போது, இரவு படுக்கைக்கு செல்லும் முன், படுக்கையறையில் நெய் தீபம் ஏற்றலாம். இது மனதை அமைதிப்படுத்தும்.
6. நீர் சார்ந்த பொருட்களை படுக்கையறையில் வைக்க வேண்டாம்
தண்ணீர் பாட்டில், குடம், கிண்ணம் போன்ற நீர்சார்ந்த பொருட்களை படுக்கை அறையில் வைக்க வேண்டாம். நீர் சக்தி, மனநிலை மற்றும் ஆற்றலை பாதிக்கும்.
சிறு மாற்றங்கள், சிறந்த தூக்கம்!
இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால், உங்கள் தூக்கமின்மை பிரச்சனை குறைந்து, உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்!
English Summary
Are you struggling to sleep at night Not only physical and mental stress Your home may have these problems