தொகுதி மறுசீரமைப்பு - தென்மாநில அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு.!
tamilnadu government invite south state political party leaders for constituency realignment
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த வாரம் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு சென்னையில் வருகிற 22-ம் தேதி தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென்மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.பி. வில்சன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர்.
இதேபோன்று தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
English Summary
tamilnadu government invite south state political party leaders for constituency realignment