வாழைத்தண்டின் மகத்தான மருத்துவ குணங்கள்!  - Seithipunal
Seithipunal


பொதுவாக வாழைமரம் என்றால் அதன் இலை, தண்டு, பூ, காய், பழம் என அனைத்தும் நன்மை தரக்கூடியவை. இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. 

வாழைப்பழங்களில் பொட்டாசியம், வைட்டமின் நிறைந்துள்ளது. வாழைப்பூ நீரிழிவு, வயதான எதிர்ப்பு குணங்கள் போன்றவற்றை சரி செய்கிறது. வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் வயிற்றுப்புண், வயிற்றில் உள்ள தேவையற்ற அமிலங்கள் போன்றவற்றை நீக்குகிறது. 

இதில் வைட்டமின் பி6, பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது உடலின் ஹீமோகுளோபின் உற்பத்தியையும், இன்சுலின் உற்பத்தியும் மேம்படுத்துகிறது. தசைகளில் வளர்ச்சிக்கு உதவும். 

இதனை பச்சையாகவும் பொறியலாகவும் அல்லது சாறாக்கி குடிக்கலாம். வாழைத்தண்டு சிறுநீர் பாதை மற்றும் நோய் தொற்றுகளுக்கு மிகச்சிறந்த உணவாக உள்ளது. இதில் டயூட்ரிக் பண்புகள் அதிக அளவில் உள்ளதால் சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

உடலின் இரும்பு சத்து மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக உள்ளது. அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம். 

ரத்த அழுத்த பிரச்சனையால் உண்டாகும் விளைவுகளை குறைக்கலாம். இன்றைய காலகட்டங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் அவதி அடைகின்றனர். இதனை சரி செய்ய வாழைத்தண்டு மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

banana stem medicinal properties 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->