கோடையில்.. அருமருந்தாகும் பாதாம் பிசின்.! எப்படி பயன்படுத்துவது.?!
Benefits of Almond Gum in Relieving Body Heat
நம் நாட்டின் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் ஒரு சில மரத்திலிருந்து வருகின்ற பிசின் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அந்தப் பிசின்களில் ஒன்றுதான் பாதாம் பிசின். இதை ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பது உடலில் பல நோய்களுக்கு மருந்தாகவும் உடல் சூட்டை தணிப்பதற்கு பயன்படுகிறது.
உடலுக்கு வைட்டமின்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தாது உப்புக்கள் எனப்படும் மினரல்கள் முக்கியமாகும். இவை எலும்பு மற்றும் தோல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் உடலின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அளவில் உதவுகின்றன. பாதாம் பிசின்களில் நம் உடலுக்கு தேவையான தாது உப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நம் உடலுக்கு தேவையான அனைத்து தாது உப்புக்களும் சம அளவில் கிடைக்கிறது.
உடல் சூட்டை தணிப்பதற்கு பாதாம் பிசின் மிகச் சிறந்த மருந்தாகும். நமது நாட்டில் பெரும்பாலான காலங்களில் வெப்ப கால நிலையை நிலவுகிறது. இதனால் மக்கள் அதிக அளவில் உஷ்ணம் மற்றும் உஷ்ணம் சார்ந்த நோய்க்கு ஆளாகின்றனர் இதிலிருந்து தவிர்த்துக் கொள்ள பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைத்து அந்தக் தண்ணீரை குடித்து வர உடல் உஷ்ணம் நீங்கி குளிர்ச்சியாகும்.
சிலருக்கு அளவுக்கு அதிகமான உணவை சாப்பிட்டு வருவதாலும் இரவு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்து உணவு சாப்பிடுவதாலும் அதிகமான காரம் மற்றும் மசாலா பொருட்களை சாப்பிடுவதால் அஜீரணம், வாய்வு தொல்லை மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படக்கூடும். இது போன்ற நேரங்களில் பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும் நமது செரிமானத் தன்மை அதிகரிக்கும்.
உடல் எடையை கூட்ட நினைப்பவர்களும் குறைக்க நினைப்பவர்களுக்கும் பாதாம் பிசின் ஒரு சிறந்த மருந்தாகும். உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வர உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட்டு வர உடல் எடையை குறைக்கலாம்.
English Summary
Benefits of Almond Gum in Relieving Body Heat