கரிசலாங்கண்ணி மூலமாக உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?!
Benefits of Karisalanganni plant
கரிசலாங்கண்ணி மூலிகைபல விதமான நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. சிறந்த மருத்துவ குணத்தை கொண்ட சிறந்த மூலிகையாக விளங்குகிறது. இந்த கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமும், புத்துணர்வு தரும்.
மேலும் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன் பெயருக்கேற்றவாறு இது உடலில் இருக்கும் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக அமைகிறது. மேலும், கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிடுவதனால் ஏற்படும் அதீத நன்மைகளை பற்றி அறிவோம்.
தினமும் கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் நலம் முன்னேறும். மேலும், கரிசலாங்கண்ணிக் கீரையுடன் தும்பை இலை மற்றும் கீழாநெல்லி இலையை சேர்த்து கசாயம் போல் செய்து குடிக்கலாம்.
இதனால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.இதயத்தை சீராக செயல்பட வைக்கும் ஆற்றல் உடையது, கரிசலாங்கண்ணிக் கீரை மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தை பலப்படுத்தும் தன்மை அதிகம் கொண்டது. மேலும், குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய் போன்றவையும் குணப்படுத்தும்.
இருமல்., ஆஸ்துமா போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி கீரையைப் பொடிசெய்து அதனுடன் திப்பிலி சூரணம் கலந்து தினமும் ஒரு வேளை என்று 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சுவாச நோய்கள் மற்றும் காச நோய்கள் தீரும். மேலும், சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் இருக்கும் நீர் தன்மையை உண்டாக்குவதற்கு கரிசலாங்கண்ணி பெரிதும் உதவுகிறது. இதனை சூப் செய்தும் அருந்தலாம்.
கண்பார்வை மங்கும் நிலையில் இருப்பவர்கள் தெளிவு பெற செய்யும். இந்தக் கீரை கண்களில் இருக்கும் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்த உதவும். கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை - தூரப்பார்வை போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
English Summary
Benefits of Karisalanganni plant