மதுரை எம்.பி. வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி!
Viluppuram Hospital MP Venkatesan
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்கச் சென்றபோது அவர் திடீரென நெஞ்சுவலியை அனுபவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை வட்டார தகவலின்படி, அவரது உடல்நிலையை நெருக்கமாக பரிசோதித்த பின், அச்சப்படும் அளவில் எதுவும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
நிகழ்வை அறிந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதார நிலை குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Viluppuram Hospital MP Venkatesan