தினமும் மிளகு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா.? மிஸ் பண்ணிடாதீங்க.!
Benefits of pepper
மிளகின் பயன்கள்:
கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன
மிளகு சேர்த்து சமைக்கின்ற உணவு எளிதில் கெடாது.
இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.
உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.
சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது.
மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.
உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.
தினமும் பத்து மிளகை உண்டு வர ரத்தம் சுத்தமாகும்.
மிளகை கடித்துச் சாப்பிட்டால் பல் ஈறுகளுக்கு பலம் கிடைக்கும்.