புடலங்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


புடலங்காய் நாம் அதிகளவில் சாப்பிடும் உணவுகளில் அதிகளவு சேர்க்கப்படும் உணவில் ஒன்றாக இருக்கிறது. இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. புடலங்காயின் வேர், இலை, காய் போன்றவை உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது.

புடலங்காயில் காணப்படும் நிறைந்த நீர்சத்து காரணமாக, இதனை சிறிதளவு சாப்பிட்டாலும் வயிறு நிறைந்துவிடும். உடல் எடையினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் நபர்கள், புடலங்காயை அடிக்கடி சாப்பிடலாம். இது உடலில் தேவையில்லாமல் இருக்கும் உப்பு நீரை வியர்வை மற்றும் சிறுநீரின் மூலமாக வெளியேற்றுகிறது.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் புடலங்காயின் இலைகளை சாறாக மாற்றி, தினமும் 2 கரண்டி வீதம் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சரியாகும். புடலங்காய் வேரினை கைப்பிடி அளவு எடுத்து மையாக அரைத்து சிறிதளவு சுடுநீரில் சேர்ந்து குடித்து வந்தால், வயிற்று உள்ள தேவையற்ற பூச்சிகள் வெளியேறும்.

புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட, நரம்புகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். நமது நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு நோய் இருக்கும் நபர்கள், புடலங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். குடல் புண் இருக்கும் நபர்கள் புடலங்காயை சாப்பிட்டு வரலாம். புடலங்காயில் குடல் புண் மட்டுமல்லாது தொடைப்புண்ணும் சரியாகும். 

உணவு செரிமான பிரச்சனை இருப்பர்வர்கள், புடலங்காயை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் எளிதில் ஜீரணம் அடையும். பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்ட நபர்கள் புடலங்காயின் இலைகளை அரைத்து தலையில் தடவி வரலாம். 

பெண்கள் புடலங்காயை குழம்பு போல செய்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் சரியாகும். மெலிந்த உடல் எடைகொண்ட நபர்கள் மற்றும் உடல்சூடு கொண்ட நபர்கள் புடலங்காயை சாப்பாட்டில் சேர்த்து கொள்வது நல்லது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Pudalangai Health Tips


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->