ஊடுருவிய நக்சலைட்டுகள் - அதிரடிக் காட்டும் பாதுகாப்பு படையினர்.!
security personnel fight naxalites in chatisgarh
இந்தியாவில் அதிலும் வட மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஊடுருவல் அதிகம் உள்ள மாநிலத்தில் ஒன்றாக சத்தீஷ்கர் உள்ளது. இந்த மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த நேரத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டைகளும் நடைபெறும். இந்த நிலையில், சத்தீஷ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே பாதுகாப்பு படையினர், அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே இன்று அதிகாலை மூன்று மணியளவில் துப்பாக்கி சண்டை வெடித்தது.
தற்போது வரை மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
security personnel fight naxalites in chatisgarh